உலகின் அதிவேக தொடருந்தை உருவாக்கியுள்ள சீனா..!!
[2025-01-01 14:32:29] Views:[164] மணிக்கு 450KM வேகத்தில் பயணிக்கும் ‘CR 450’ எனும் உலகின் அதிவேக தொடருந்தை சீனா அறிமுகம் செய்துள்ளது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 450KM வேகத்தில் பயணித்து ‘CR 450’ தொடருந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது வேகம், எரிசக்தி பயன்பாடு, இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்டவற்றில் உலக அளவில் புதிய பரிணாமத்தை இந்த தொடருந்து தன்வசம் வைத்துள்ளது.
தற்போது செயல்பாட்டில் உள்ள மணிக்கு 350 KM வேகத்தில் பயணிக்கும் அதிவேக ‘CR 400’ புல்லட் தொடருந்தை விட இதன் வேகம் அதிகமாக உள்ளது.
சீனாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 47,000 KM அதிவேக ரயில் தண்டவாளங்களில் இந்த ‘CR 450’ வகை புல்லட் தொடருந்து சேவையில் ஈடுபடும் என சீன அசரசாங்கம் தெரிவித்துள்ளது.