விடாமுயற்சி குறித்து லைகா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை: ரசிகர்கள் சோகம்...!!
[2025-01-01 21:45:38] Views:[153] மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித், திரிஷா மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் குறித்த படத்தினை பொங்கல் அன்று வெளியிட முடியவில்லை என லைகா நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் "சில தவிர்க்க முடியாத காரணங்களினால் "விடாமுயற்சி" திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பதிவிற்கு ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்