பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள 10 திரைப்படங்கள்..!!
[2025-01-02 11:38:44] Views:[205] மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் வெளியீட்டு திகதி தள்ளிப்போய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுமார் பத்து படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது அந்த குறித்த படங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படம், ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகியவை ரிலீசாக உள்ளது.
மேலும் விஜயகாந்தின் மகனான ஷண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன், சிபிராஜ் நடிக்கும் 10 ஹவர்ஸ், மிர்ச்சி சிவாவின் சுமோ, கலையரசன் நடித்துள்ள மெட்ராஸ் காரன் ஆகிய படங்களும்,
கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்த தருணம் ஆகிய படங்களுடன் இறுதியாக 2k லவ் ஸ்டோரி என்ற படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளன.