இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று: பீதியில் இந்திய மக்கள்..!!
[2025-01-06 14:54:28] Views:[322] சீனாவில் HMPV எனும் வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவவிக்கின்றது. இந்நிலையயில் இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV தொற்று பாதிப்பு இருப்பதாக இந்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளன் குழந்தைகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.