yarlathirady.com

நேபாளத்தில் நிலநடுக்கம் 35 பேர் உயிரிழப்பு! பலர் காயம்!!

[2025-01-07 15:44:20] Views:[146]

நேபாள திபெத்தை எல்லை பகுதிகளை உலுக்கியுள்ள கடும் பூகம்பத்தினால் 35க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள - சீன எல்லையில் திபெத் பகுதியில் மையம்கொண்டிருந்த இந்த பூகம்பத்தினால் பல கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாகவும் நேபாள மற்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

7.1 ரிக்டர் அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திபெத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சிகட்சேயில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என சீன அமெரிக்க கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.

சிகட்சோவை சுற்றியுள்ள டிங்கிரி கவுண்டியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மூன்று நகரங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

அதேவேளை பூகம்பத்தின் அதிர்வுகளை இந்தியாவின் சில பகுதிகளில் உணரமுடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் திகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.