ISRO வின் புதிய தலைவராக மீண்டும் ஒரு தமிழர்..!!
[2025-01-08 15:30:43] Views:[164] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(ISRO) புதிய தலைவராக V. நாராயணன் எதிர்வரும் 14ம் திகதி V.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த காலங்களில் அப்துல் கலாம் பதவி வகித்ததில் இருந்து சந்திரயான் 3 இன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வரை பல்வேறுபட்ட தமிழர்கள் இஸ்ரோவின் தலைமை பொறுப்பையேற்று சிறப்பாக செயட்பட்டு வந்துதுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த V. நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார்.
இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக V. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலங்களில் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.