அமெரிக்காவில் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றம்!
[2025-01-09 15:01:53] Views:[168] அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பரவி வரும் கடுமையான காட்டு தீயினால் 13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்கள் தீக்கிறையாகியுள்ளது இதன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் நேற்றய தினம் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர்நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
நீட்டிக்கப்பட்ட வறண்ட காலநிலையைத் தொடர்ந்து வலுப்பெற்றுள்ள பலத்த காற்றானது தீப்பரவலை மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப் படை வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.