சூர்யாவின் "ரெட்ரோ" படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய அறிவிப்பு..!!
[2025-01-10 09:25:03] Views:[202] சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகிய வெளியாகிய கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவந்தது. இப் படம் 150 கோடி மட்டுமே வசூலித்து பாரிய தோல்வியை சந்தித்தது. ஆனாலும் தற்போது இப் படம் ஆஸ்கர் பட்டியலிற்கு தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படமான ரெட்ரோ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் திகதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்ரோ படம் எதிர்வரும் மே 1ஆம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உசற்சாகத்தில் உள்ளனர்.