yarlathirady.com

தங்கச் சுரங்கத்தில் சிக்கி 78 ஆபிரிக்கர்கள் பலி!! 166 பேர் மீட்பு;

[2025-01-17 11:12:55] Views:[144]

தென்னாப்ரிக்காவில் சட்டவிரோத சுரங்கம் தோண்டியதுடன் அரசுடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதமாக சுரங்கத்தில் சிக்கி தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தென்னாபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களை சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் சரணடைய மறுத்து அரசாங்கத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கச் சுரங்கத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். இவ்வாறு கடந்த இரு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து 2 கி.மீ., ஆழ சுரங்கத்திலுள்ள தொழிலாளர்கள் வெளியேற உதவும் கயிறு மற்றும் கம்பிகளை அரசாங்கம் அகற்றியது. இதனால் உணவின்றியும், நீரின்றியும் கடந்த இரு மாதங்களாக தவித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 160 பேர் மேலே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மேலும் சில தொழிலாளர்கள் வரமறுத்து சுரங்கத்திலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் பிரதி நிதிக்குழு ஒன்று அரசாங்கத்தைக் குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம் ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புப்பணியை மேற்கொள்ள மறுத்ததே சுரங்கத் தொழிலாளர்கள் இறப்புக்கும் உடலில் நீரிழப்புக்கும் காரணம் என தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.