பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய விஜயின் இறுதி படதலைப்பு..!!
[2025-01-26 22:43:00] Views:[234] விஜய் தற்போது H.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார் இந்த படம் விஜயின் இறுதி படம் என்பதால் இந்த படத்தின் கதை அவருடைய அரசியல் குறித்து பேசும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தளபதி விஜய்யின் 69 ஆவது படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘ஜன நாயகன்’ என்ற தலைப்போடு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் விஜய்க்கு பின்னால் உள்ள மக்கள் கூட்டத்தை எடுத்துக் காட்டும் விதமாக வெளியாகி உள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.