yarlathirady.com

2024 ICC டெஸ்ட் விருதை வென்ற இந்திய அணியின் பும்ரா..!

[2025-01-31 09:35:18] Views:[147]

ICC 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு பும்ரா, 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 71 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு, இங்கிலாந்தின் ஜோ ரூட் அவுஸ்திரேலியாவின் கம்மின்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஹரி புருக் ஆகியோருடனான போட்டியின் மத்தியில் பும்ராவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இதற்கிடையில் இந்திய மகளிர் அணியின் துணை தலைவர் ஸ்மிருதி மந்தனா 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் ஒருநாள் போட்டி வீராங்கனையாக ஐசிசியினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஸ்மிருதி மந்தனா 13 இன்னிங்ஸில் 747 ஓட்டங்களை பெற்றிருந்தார்.அதில் 4 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கியிருந்தன.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான ஆடவர் ஒருநாள் போட்டிகள் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் அவர் 12 இன்னிங்ஸ்களில் 417 ஓட்டங்களை பெற்றிருந்தார் அத்துடன் பந்து வீச்சில், 13 இன்னிங்ஸில் 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.