ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் தலையெடுக்கும் எபோலா வைரஸ்.!!!
[2025-02-03 09:17:46] Views:[137] தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் எபோலா வைரஸானது மீண்டும் பரவி வருகின்றமை மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.