yarlathirady.com

பிறந்தநாளன்று வெளியான சிம்புவின் 50வது படம் தொடர்பான தகவல்..!

[2025-02-03 15:11:03] Views:[244]

நடிகர் சிம்பு இன்றைய தினம் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களுக்கான சிறப்பு போஸ்டர்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சிம்புவின் ஐம்பதாவது படம் தொடர்பிலான அறிவிப்பும் போஸ்டரும் சற்றுமுன் வெளியாகி உள்ளது. அதில் சிம்புவின் 50 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் இதனை சிம்புவே தனதுஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்க உள்ளார்.

சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார்.

இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றார்கள்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.