அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி இருக்கு...?
[2025-02-06 10:43:32] Views:[481] முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றது என்றாலே ரசிகர்கள் தியேட்டரை திருவிழாக் கோலமாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் அஜித் கதாநாயகனாக நடித்த விடாமுயற்சி திரைப்படம் 'பிரேக் டவுன்' என்ற ஆங்கில திரைப்படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்துள்ளார்கள்.
அதன்படி விடாமுயற்சி படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் அஜித் இன் நடிப்பு மிகவும் ரசிக்கத்தக்கதாக காணப்படுவதாகவும் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாகவும் இரசிகர்கள் விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.