yarlathirady.com

இந்தியாவின் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சிக்கி பலர் பலி: நூற்றுக்கணக்கானோர் படுகாயம்...!!!

[2025-02-06 11:42:58] Views:[157]

இந்தியாவின் மகா கும்பமேளா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி ஆரம்பமாகியது.

40 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி எனும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இதுவரை 15 கோடி பேர் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.