இலங்கை–அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் இரண்டாம் ஆட்டம் இன்று.
[2025-02-06 15:04:49] Views:[110] இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்ற(06) ஆரம்பமாகவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தனது திறமையை வெளிப்படுத்தியது.
அதேவேளையில் இலங்கை அணி தமது சொந்த ரசிகர்கள் முன்னால் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளது.
இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் அவுஸ்திரேலியா 21 போட்டிகளில் வென்றுள்ளது மற்றும் இலங்கை 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. 8 போட்டிகள் சமனிலையில் முடிந்துள்ளன.
அதேநேரம், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்னவின் 100 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.