அமெரிக்காவில் மாயமான விமானம் கண்டுபிடிப்பு: பயணிகள் அனைவரும் பலி...!
[2025-02-08 21:20:17] Views:[105] அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு சென்ற விமானம் மாயமாகியிருந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த விமானி உள்பட 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியதன் காரணமாக விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயல்வதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது.
இந்நிலையில், மீட்புப்பணியாளர்கல் ஹெலிகாப்டர் மூலம் விமானத்தின் கடைசியாக சிக்னல் வந்த இடத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அலாஸ்கா கடல் பனியில் விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டனர்.
அந்த விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.