வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதிகளை புனரமைக்க பாரிய வேலைத்திட்டம்.
[2025-02-12 09:06:30] Views:[229] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,000km கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான பாரிய வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சமர்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, வடக்கு மாகாணத்தில் 1,500km மற்றும் கிழக்கு மாகாணத்தில் 500km வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டமானது அனைத்து பிரதேச செயலகங்களிலும் மோசமான நிலையில் காணப்படுகின்ற வீதிகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.