அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.
[2025-02-12 10:53:19] Views:[163] சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்தப்போட்டிகள் பகல் நேர ஆட்டங்களாக 2025 பெப்ரவரி 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இரண்டு புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் புதுமுக துடுப்பாட்ட வீரர்களான நிஷான் மதுஷ்க மற்றும் மஹா நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள் பின்வருமாறு
சரித் அசலங்க (அணித்தலைவர்)
பத்தும் நிஸங்க
அவிஷ்க பெர்னாண்டோ
குசல் மெண்டிஸ்
கமிந்து மெண்டிஸ்
ஜனித் லியனகே
நிஷான் மதுஷ்கா
நுவனிந்து பெர்னாண்டோ
வனிந்து ஹசரங்க
மஹிஷ் திக்சனா
துனித் வெல்லேஜ்
ஜெஃப்ரி வந்தசே
அசித பெர்னாண்டோ
லஹிரு குமார
முகமது ஷிராஸ்
எஷான் மலிங்க