கடவுச்சீட்டு பெற இனி வரிசையில் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை..!
[2025-02-12 21:55:03] Views:[138] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு-குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த வாரத்திற்குள் 24 மணி நேர சேவை தொடங்கப்படுவதால், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரவும் பகலும் உழைக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.