yarlathirady.com

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய தலைவர் நியமனம்..!

[2025-02-14 09:28:41] Views:[117]

இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடருக்கான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் இயக்குநர் மோ போபட் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் ஆகியோர் இன்று (14) உத்தியோக பூர்வமாக இதனை அறிவித்துள்ளனர்.

இதனால், முன்னாள் தலைவர் விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்துவார் என்ற பரவலான ஊகங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் வந்துள்ளது. 2021 முதல் றோயல் செலஞ்சர்ஸ் உடன் இருக்கும் படிதார், ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியின் 8 ஆவது தலைவராவார்.

31 வயதான படிதார் 2024 சீசனில் பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் அடங்கலாக 395 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.