yarlathirady.com

அபார வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி..!

[2025-02-14 21:16:35] Views:[94]

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 101 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அதன்படி, 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.


சினிமாசெய்திகள்
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.