அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்திற்கு 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு...!!
[2025-02-17 11:30:36] Views:[166] நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்-புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் புங்குடுதீவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்திற்கு 500 மில்லியன் நிதி தருவதாக அநுர தெரிவித்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார்.