கனேடிய விமானமொன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்து..!!
[2025-02-18 21:33:05] Views:[96] கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவில் நிலவியுள்ள புதிய டேப் மண்டல ஜெட் பனிப்புயலைத் தொடர்ந்து காற்றுடன் கூடிய வானிலைக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம் கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
விமானத்தில் இருந்த 76 பயணிகள் மற்றும் 04 பணியாளர்கள் உட்பட 80 பேரில் 18 பேர் வரையில் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.