ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
[2025-02-19 14:55:58] Views:[121] நேற்று (18) இரவு 11.30 மணியளவில் தெஹிவளை - பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் தீ விபத்தின் போது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.