yarlathirady.com

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது..!

[2025-02-20 14:53:28] Views:[145]

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று(20) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 10 இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் மூன்று டோலர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை தளங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்படி 10 இந்திய மீனவர்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றங்களில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சினிமாசெய்திகள்
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.