காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி..!
[2025-02-21 21:37:36] Views:[134] நேற்றையதினம் அரலகங்வில, வெஹெரகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 72 வயதுடைய பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், 75 வயதுடைய அவரது சகோதரர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதித்த பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.