இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா நிறுவனம்..!!
[2025-02-22 10:52:08] Views:[113] கடந்த திங்கட்கிழமை உலக பணக்காரரான எலோன் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழையும் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மேற்கொண்ட சந்திப்பின் பின் பில்லியனர் எலோன் மஸ்க்குடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஸ்லா தற்சமயம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் 13 பதவிகளுக்கான வெற்றிடங்களை அறிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு இயக்கம் முக்கிய பெருநகரங்களில் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.