பயணிகள் கப்பல் சேவையான நாகப்பட்டினம் - காங்கேசன்துறை சேவை மீண்டும் ஆரம்பம்
[2025-02-22 12:42:45] Views:[127] இன்று(22) புதுப் பொழிவுடன் மீண்டும் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகியுள்ளது.
காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து 83 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த கப்பலானது, இலங்கையின் காங்கேசன்துறைக்கு வந்தடைந்தயவுள்ளது. மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.