யாழில் கோர விபத்து-ஒருவர் பலி பலர் படுகாயம்...!!
[2025-02-22 21:25:20] Views:[117] யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வேகமாக பயணித்த ஹயஸ் வாகனம் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், கோப்பாய்-கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு பூதவுடலை எடுத்து சென்றவர்கள் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வாகனத்தை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.