ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீரர்..!!
[2025-02-23 08:50:42] Views:[87] சர்வதேச கிரிக்கெட் சபை(ICC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மகேஷ் தீக்சனா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியதன் காரணமாகவே இந்த சாதனையை படைத்துள்ளார்.
மகேஷ் தரவரிசையில் முதலிடம் பிடித்ததால் முன்னிலை வகித்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.