சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு: அச்சத்தில் உலக நாடுகள்..!!
[2025-02-23 09:25:03] Views:[97] சீனாவில் கோரானவை ஒத்த புதிய வகை வைரஸை சீன ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
HKU5-CoV-2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், மெர்ஸ் வைரஸை உள்ளடக்கிய மெர்பெகோவைரஸ் துணை வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்படுகின்றது.
கொரோனா போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் கொரோனாவுக்கு காரணமான வைரஸான SARS-CoV-2 போன்ற மனிதர்களுக்கு பரவும் ACE2 உடன் அதே பிணைப்பை ஏற்படுத்துகிறது.
கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத சூழலில் சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் இணங்காணப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியானது தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.