yarlathirady.com

யாழ்தேவி புகையிரதம் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது..!!

[2025-02-23 19:01:55] Views:[142]

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், புகையிரதம் மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடத்தி வந்த மூன்று சந்தேக நபர்கள் நேற்றய தினம் கைது செய்யப்பட்டனர்.

யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி அரியாலை பகுதியில் வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து யாழ்ப்பாண புகையிரத நிலையமும் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இவர்கள் 15-13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


சினிமாசெய்திகள்
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.