2026 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் கொண்டுவரப்படுவுள்ள மாற்றம்.
[2025-02-24 21:36:53] Views:[183] மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களில் மாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் ஒன்று மற்றும் 6ஆம் தரத்திற்கான பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,இந்த வேலைத்திட்டத்தினை 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அதேநேரம் ஏனைய தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்விச் சுமைகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
பரீட்சை முறைமைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பாடத்திட்டத்தின் உள்ளடக்கங்களில் மாத்திரம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
தற்போதைய பாடத்திட்ட உள்ளடக்கங்களானது, 21 ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமானதாக அமைந்திருந்தாலும், சில விடயங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி போதுமானதாக இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.