இந்தியாவின் அசாம் பிரதேசத்தில் நிலநடுக்கம்...!
[2025-02-27 08:51:59] Views:[225] இந்தியா-அசாமின், மோரிகான் பகுதியில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.10 மணியளவில் ஏற்பட்டுள்ளது. ஒடிசாவின் பாரதீப், பூரி, பெர்ஹாம்பூர் மற்றும் சில இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் 91KM ஆழத்தில் மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் சொத்து சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.