இந்தியா-இலங்கைக்கு இடையே ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கப்பல் சேவை...!
[2025-02-27 09:02:28] Views:[169] இந்தியாவின் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மற்றுமொரு புதிய பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான செய்தியொன்றை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் சேவையானது இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. 250 பயணிகள் மற்றும் ஒரு மணிநேரத்தில் பயணிக்கக் கூடிய வகையிலான கப்பல் சேவையை இயக்குவதற்கான விருப்பம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தமிழக கடல்சார் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக இராமேஸ்வரத்தில் தற்காலிக பயணிகள் முனையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு சுங்க சோதனை சாவடியை அமைப்பதற்கும் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .