ஒன்லைனில் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்.
[2025-02-27 09:33:20] Views:[188] ஒன்லைனில் பணத்தை பரிமாற்றும் போது கணக்கில் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டணம் ரூபாய் 05/= குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றும் போது பணம் அனுப்புபவரின் கணக்கிலிருந்து ரூபாய் 30/= வங்கி கட்டணம் வசூலிக்கபட்டது.
எனினும் இனி வரும் காலங்களில் புதிய கட்டண திருத்தத்தின் மூலம் நிகழ்நிலையில் பணத்தை மாற்றும் போது கணக்கிலிருந்து வசூலிக்கப்படும் தொகை ரூபாய் 25/= ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.