திருகோணமலைக்கு புதிய உதவி தேர்தல் ஆணையாளர்
[2025-02-28 11:53:45] Views:[154] நேற்று (27) திருகோணமலை மாவட்ட புதிய உதவி தேர்தல் ஆணையராக எஸ்.கே.டி. நிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் பொது சேவை ஆணைக் குழுவின், உதவிச் செயலாளராக தற்போது பணியாற்றி வந்த இவருக்கு, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவருக்கு, தேர்தல் ஆணையர் குழு இந்த நியமனத்தை வழங்கி உள்ளதுடன் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.