6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
[2025-02-28 12:08:44] Views:[154] நேற்று முன்தினம் (26) அதிகாலை இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடுத்தியது.
இந்தோனேசியாவின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கம் 2004 ஆம் ஆண்டில் ரிக்டர் 9.1 அளவில் பதிவான பேரழிவு ஆகும்.