பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து!
[2025-03-02 10:11:00] Views:[238] நேற்று (01) மூதூர் பகுதியில் லொரியும் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய 33 பேரில் 18 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ளவர்கள் தற்போது மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.