yarlathirady.com

யாழ். “வல்வெட்டித்துறை - ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்“ என்ற அறிக்கை வெளியீட்டு நிகழ்வு

[2025-03-02 22:48:30] Views:[130]

யாழ்ப்பாணத்தில் ‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பு யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்றுள்ளது.


குறித்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.


சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று வெளியிட்டு வைத்தனர்.


பாதிக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம்,பொதுச்சுடர் ஏற்றல், மலர் அஞ்சலியை தொடர்ந்து வரவேற்புரையை மூத்த ஊடகவியலாளர் தி.எஸ் தில்லைநாதன் நிகழ்த்தியிருந்தார்.


இதையடுத்து, வல்வை முத்துமாரிஅம்மன் தேவஸ்தான பிரதம குரு சோ தண்டாயுதபாணி தேசிகர், யாழ். முறைமாவட்டத்தின் மூத்த குருவும் முன்னாள் ஊரணி மயிலிட்டி பங்குத்தந்தையும் லண்டன் கத்தோலிக்க ஆண்மீக பணியகத்தின் இயக்குநருமான அருட்தந்தை தேவராஜன் அடிகள் ஆகியோர் அஞ்சலி உரையை ஆற்றினர்.


தொடக்க உரையை வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு செயலாளர் ந. ஆனந்தராஜ் ஆற்றினார்.


அதன் பின்னர் அறிக்கை அறிமுகமும் பிரதிகள் வழங்கலையும் தொடர்ந்து சிறப்புரைகளை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிறிட்டோ பெர்னானடோ மற்றும் வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு தலைவர் ச.செல்வேந்திரா ஆகியோர் ஆற்றியிருந்தனர்.


நன்றி உரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் கு.மகாலிங்கம் நிகழ்தியிருந்தார்.


மேலும், இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.