yarlathirady.com

தட்டுப்பாடின்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பண்டிகை காலத்தில் விநியோகம்!

[2025-03-04 11:19:21] Views:[98]

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.


அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் நான்காவது முறையாகவும் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று கூடினர். எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மக்களுக்குத் தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.


நாட்டுக்குள் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தொகை சேகரிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. நுகர்வோரும்,விவசாயிகளும், உற்பத்தியாளர்களும் பாதுகாக்கப்படும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


குறிப்பாக கால்நடை உணவு உற்பத்திக்கான சோள இறக்குமதிக்கு ஏப்ரல் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அனுமதி வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சோள இறக்குமதியின் போது புதிய முறைமையொன்றின் தேவையை வலியுறுத்திய அமைச்சர் கே.டீ.லால்காந்த அது நடைமுறைப்படுத்தப்படும் வரையில் பழைய முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.


பல்வகைத்தன்மையான உணவுகளை தெரிவு செய்ய பிரஜைகளுக்கு இருக்கின்ற உரிமையை உரிதுப்படுத்தல் மற்றும் உயர் தரத்திலான உற்பத்திகளை கொள்வனவு செய்ய வாய்ப்பளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அனைத்து பிரஜைகளுக்காகவும் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் நிலையான உணவு விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரச கொள்கையை நனவாக்கிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே உணவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் நோக்கமாகும்


சினிமாசெய்திகள்
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.