இலங்கையில் நடாத்தப்படவுள்ள தெற்காசிய கால்பந்து போட்டித்தொடர்..!!
[2025-03-13 11:06:34] Views:[86] 17 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு போட்டியை நடத்தும் உரிமை இம்முறை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தின் போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா, மாலைத்தீவு, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் போட்டியை நடத்தும் இலங்கை உட்பட ஏழு நாடுகள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.