இங்கிலாந்தில் உருவாகவுள்ள உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்..!
[2025-03-13 11:15:37] Views:[77] இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானம் அமைப்பதற்கான திட்டங்களை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வெளியிட்டுள்ளது.
இது இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை மிஞ்சும் அளவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதான கட்டுமானத்துக்கு மொத்தமாக 2 பில்லியன் யூரோ வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், மைதான கட்டுமானத்திற்கான முழுச் செலவையோ, காலக்கெடுவையோ யுனைடெட் கிளப் வெளியிடாத நிலையில் கட்டடக் கலைஞர் நார்மன் ஃபாஸ்டர் கட்டுமானப் பணிகளுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.