yarlathirady.com

இந்திய பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது..!!

[2025-03-13 11:27:42] Views:[167]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு "தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன்" என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

மொரீஷியஸ் நாட்டின் 57ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு 2 நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

பிரதமர் மோடியின் வருகையை சிறப்பிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், மொரீஷியஸை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, "தி கிரேட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்டு கீ ஆப் தி இந்தியன் ஓசன்" என்ற மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெற்ற பின்பு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இது எனக்கான கௌரவம் மட்டும் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கௌரவம். இந்த விருது, இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலாசார மற்றும் வரலாற்று பிணைப்புகளுக்கான அடையாளம் ஆகும் என குறிப்பிட்டார்.


சினிமாசெய்திகள்
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
கமல்ஹாசனின் தக் லைஃப் பட டிரைலர்
2025-05-18 10:41:08
தக் லைஃப் படத்தின் டிரைலர் வந்துள்ளது.
மாமன் படம்
2025-05-18 10:32:01
இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மகாராஜா 2
2025-05-14 19:38:15
இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:44:59
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
2025-05-11 11:43:02
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.