பிரித்தானிய கடலில் இரண்டு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து..!!
[2025-03-13 11:37:17] Views:[91] பிரித்தானியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நச்சு இரசாயனத்தை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்றுடன் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று மோதியதில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போர்த்துகீசிய கொடி ஏந்திய சோலாங் (Solong)என்ற கொள்கலன் கப்பலும், அமெரிக்க கொடி ஏந்திய ஸ்டெனா இம்மாகுலேட்( Stena Immaculate) என்ற டேங்கர் கப்பலுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரு கப்பல்களில் பயணித்த 37 நபர்களும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்டோரில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எண்ணெய் தாங்கி கப்பலில் அமெரிக்க அரசாங்கத்திற்கான ஜெட் எரிபொருளை ஏற்றிச் செல்லும் போதே விபத்துக்குள்ளாகிய நிலையில் எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்த எரிபொருள் தற்போது வட கடலில் கசிந்து வருகிறது.
தற்போது, அப்பகுதியில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.