நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடர்..!
[2025-03-21 16:41:17] Views:[138] 18 ஆவது IPL பருவகால தொடர் நாளை(22) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (K.K.R) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (R.C.B) அணிகள் மோதுகின்றன.
பிரமாண்ட விழாவுடன் ஆரம்பமாகும் இந்த போட்டியில், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரெப் இசை பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக விழாக்குழு தெரிவித்துள்ளது.