கடலில் குளிக்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு: யாழில் சம்பவம்...!!
[2025-03-22 09:16:09] Views:[76] யாழ்ப்பாணம்-சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக நேற்று மதியம் இளவாலை, சேந்தாங்குளம் கடலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, கடலில் குளித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பபட்டுள்ளது.