yarlathirady.com

துறைமுக ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்.

[2025-03-22 11:36:06] Views:[80]

இலங்கை துறைமுக ஊழியர்களுக்கான ஆண்டு ஊக்கத்தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது உட்பட பல்வேறு சலுகைகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த உடன்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.

ஆண்டு போனஸ் தொகையை ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தவும், அதில் 60 சதவீதத்தை இந்த ஆண்டிலும், 40 சதவீதத்தை 2026 ஆம் ஆண்டிலும் வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

துறைமுக ஊழியர்களின் ஊதிய உயர்வின் மதிப்பை ஆகஸ்ட் முதல் 80 சதவீதம் வரை உயர்த்துவது, ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும் 3,500 ரூபாய் ஊக்கத்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தொடர்பாகவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது தவிர, துறைமுக ஊழியர்களின் ஊதிய உயர்வின் மதிப்பை ஆகஸ்ட் முதல் 80 சதவீதம் வரை உயர்த்துவது, ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும் 3,500 ரூபாய் ஊக்கத்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் தொடர்பாகவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.