இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 30ற்கும் மேற்பட்டோர் காயம்..!!
[2025-03-22 21:09:48] Views:[102] கொழும்பு–கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், விபத்துக்குப் பின்னர் அந்த வீதியில் மேலும் பல வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.